பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கும் ஆளுங்கட்சி வேட்பாளர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. 

ஏற்கனவே, இந்த தொகுதியில், ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த சமயத்தில் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனை அடுத்து இந்த தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிகள் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் முறையாக வேட்பாளராக தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தி களமிறங்க உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவின் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயநாடு தொகுதி வேட்பாளர் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் பாஜகவின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Wayanad By Poll CPI Candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->