நடுவழியில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்.! பயணிகளின் கதி என்ன?
train derailed in tripura
திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மட்டும் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வழக்கம்போல் இந்த ரெயில் இன்று காலை 7 மணியளவில் அகர்தலாவில் இருந்து புறப்பட்டது. அதன் படி இந்த ரெயில் அசாமில் உள்ள திபாலாங் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரெயில் என்ஜின் உட்பட மொத்தம் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இந்த விபத்தால், அவ்வழியாக செல்லும் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
train derailed in tripura