வெள்ளக் காலத்தில் முதல்வர் மக்களை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை - சசிகலா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்துள்ளதாவது:- "அதிமுக தற்போது சரியாக இல்லை. அதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்தி வரும் 2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தை பிரித்துள்ளார்கள். 

அந்தக் காலத்தில் பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என்று பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள் அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தை பிரித்து வைத்துள்ளார்கள். எந்த வேலைகளையும் சரிவர செய்ய முடியவில்லை. 

நான் சொல்வதை கேட்டு இப்போதாவது இதனை சரி செய்யுங்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள மூன்று கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம். ஆனால் ஜெயலலிதா செய்ததை திமுகவினர் செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்த திமுக அரசு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, மக்களை மழை வெள்ளத்திலிருந்து காக்க தவறிவிட்டது. வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala press meet in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->