மும்பையில் தட்டமையினால் ஒன்பது மாத ஆன் குழந்தை உயிரிழப்பு.!
nine month baby died for measles in mumbai
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு கடந்த 11-ந் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில் குழந்தையின் உடலில் தடிப்புகள் உருவாகி, சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தையை கடந்த 16-ந் தேதி சிகிச்சைக்காக மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பின்னர் குழந்தை தட்டம்மை மற்றும் நிமோனியா உள்ளிட்ட பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "குழந்தைக்கு அவரது பெற்றோர்கள் தட்டம்மை தடுப்பூசியை போடவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மும்பையில், இதுவரை 21 குழந்தைகள் தட்டம்மைக்கு உயிரிழந்துள்ள நிலையில், 78 குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குறிப்பாக குர்லா பகுதியில் மட்டும் 14 குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
nine month baby died for measles in mumbai