'மீண்டும்' கேரளாவில் கால் பதித்த 'நிபா' வைரஸ் - 14 வயது சிறுவன் பாதிப்பு ..!! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 'நிபா' வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப் படுத்தியுள்ளார். 

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியார்களிடம் பேசியதாவது, " கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. 

புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் சிறுவனுக்கு செய்த பரிசோதனையில் இந்த தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த சிறுவன் மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையின் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த வைரஸ் பரவல் குறித்தும், வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனோடு தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டும் , ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அந்த சிறுவன் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மேலும் பல தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

கடந்த 1998ம் ஆண்டு தான் இந்த 'நிபா' வைரஸ் முதன் முதலாக மலேசியாவில் கண்டறியப் பட்டது. இது முக்கியமாக பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்தும், நாய், பூனை, ஆடு, மாடு போன்ற உயிரினங்களிடம் இருந்தும் மனிதர்களுக்குப் பரவுவதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nipah Virus Started Spreading in Kerala 14 Year Old Boy Affected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->