நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு! தேர்தல் பத்திரப் பணம் வசூலித்ததாக புகாரில் நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர், பெங்களூரில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய பாஜக அம்மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தேர்தல் பத்திரம் தொடர்பான புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று, திலக் நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman FIR Bangalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->