பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா வாய்த்தவறி கூறிய அந்த வார்த்தையால்.. கலகலப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் மோடியின் தலைமையிலான கடைசி பட்ஜெட் என்ற காரணத்தால் இதில் மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தது. 

மத்திய அரசின் உஜ்வாலா திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஜந்தன் யோஜனா திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிதி அமைச்சர் பட்டியல் இட்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக வருமான வரி செலுத்துவோருக்கு வரி உச்சவரம்பை அதிகரித்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது.

அப்பொழுது பழைய காலாவதியான வாகனங்களை அகற்ற நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். இது பற்றி பேசியபோது பழைய பொலிட்டிக்கல் மன்னிக்கவும் பொல்யூட்டிங் அதாவது மாசுபடுத்தக்கூடிய வாகனங்களை அப்புறப்படுத்தும் செயல் காற்று மாசை கட்டுப்படுத்த முக்கிய தேவை இதற்காகத்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."என்று கூறினார்.

பழைய வாகனங்களை அகற்றுவது குறித்து அவர் பேசியபோது பழைய கட்சிகளை அகற்றுவது பற்றி அவர் காங்கிரசை விமர்சிப்பதாக கூறி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நிர்மலா சீதாராமன் இதை வாசித்த போது நாடாளுமன்றத்தில்  சிரிப்பலை ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala sitharaman Speech makes Laugh In Parliament


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->