மன்மோகன் சிங்கை மனதார பாராட்டிய நிதின் கட்கரி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் காட்கரி "இந்தியாவில் ஏழைகளுக்கு பயன் அளிக்கக்கூடிய தாராளமயமாக்கல் கொள்கையை கடந்த 1991ல் மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார். 

இந்தக் கொள்கையின் மூலம் இந்தியாவுக்கு புதிய பொருளாதாரப் பாதையை மன்மோகன் சிங் காட்டியுள்ளார். இதற்காக இந்தியாவே மன்மோகன் சிங்குக்கு கடமைப்பட்டுள்ளது. நான் மகாராஷ்டிராவின் அமைச்சராக இருந்தபோது மன்மோகன் சிங் கொண்டு வந்த இந்த பொருளாதார சீர்திருத்த காரணமாக என்னால் சாலை திட்டங்களுக்காக அதிக நிதி திரட்ட முடிந்தது. 

விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் அதிக பலன்கள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்ட தாராள பொருளாதாரக் கொள்கை இப்பொழுது நாட்டிற்கு தேவை. தாராளமயமாக்கல் கொள்கை ஒரு நாட்டை எப்படி மேம்படுத்தும் என்பதற்கு சீனாவே ஒரு எடுத்துக்காட்டு" என நிதின் கட்காரி பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitin Gadkari heartily praised Manmohan Singh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->