வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! டிசம்பர் மாதத்திற்குள் பள்ளங்களே இருக்காது! மத்திய அமைச்சர் உறுதி!
NitinGadkari said No potholes on highways by December
பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானமானது சாலை கட்டுமானம், பொறியியல் எனப்படும் BOT, கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC), மற்றும் ஹைப்ரிட் வருடாந்திர மாதிரி (HAM) ஆகிய மூன்று முறைகள் மூலம் செய்யப்படுகிறது. EPC முறையில் கட்டப்படும் சாலைகளுக்கு அதிகப்படியான பராமரிப்பு தேவைப்படுகிறது.
BOT முறையில் அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பராமரிப்புச் செலவை ஒப்பந்தக்காரரே ஏற்க வேண்டும் என்பதால் சாலைகள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்த கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் டிசம்பர் இறுதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளை பள்ளங்கள் இல்லாததாக மாற்றும் நோக்கத்துடன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தங்களை உறுதி செய்தவராக தெரிவித்துள்ளார்.
அதனால் சாலை கட்டுமானம் பொறியியல் எனப்படும் BOT முறையில் சாலைகளை பெரிய அளவில் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தனது அமைச்சகத்தின் பல்வேறு முயற்சிகள் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முறையாக செயல்பட்டதினால் வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
NitinGadkari said No potholes on highways by December