வயநாடு நிலச்சரிவு எதிரொலி - 6 மாதங்களுக்கு மின் கட்டணம் கிடையாது.!
no electricity bill for 6 months to wayanadu landslide affected areas
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 30-ந் தேதி அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மூன்று மலைக்கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இதுவரைக்கும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் எஞ்சி இருக்கும் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், அங்குள்ள வீடுகளில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
no electricity bill for 6 months to wayanadu landslide affected areas