யாரும் காலில் விழ வேண்டாம் - மத்திய அமைச்சர் விரேந்திர குமார் சர்ச்சை பேச்சு!
No one should fall on their feet Union Minister Virendra Kumar controversial speech
மத்தியபிரதேச மாநிலம் திக்மார்க் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்ற மத்திய அமைச்சர் விரேந்திர குமார், சமூக நீதியின் அடிப்படையில் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி இன்றி வெற்றி பெறும் இந்த சாதனை மன்னன், 2009 முதல் திக்மார்க் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். தற்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
திக்மார்க் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்ட உத்தரவின்படி:
"எந்த காரணத்திற்காகவும் என் காலில் யாரும் விழக்கூடாது" என்று கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், "என் காலில் விழுந்து வணங்கும் ஒருவர் இருந்தால், அவர்களுக்குச் செல்வம் அல்லது உதவி செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படாது" என தெரிவித்தார்.
வயதானவர்களுக்குச் சுயமரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் என்றும், ஒருவரின் காலில் மற்றவர் விழுவது சமூக மரியாதைக்கு எதிரானது என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரியவர்களுக்குச் சமர்ப்பணம் அடையாளமாக காலில் விழுவது பழமையான வழக்கம். ஆனால், சில மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், இது சுயமரியாதைக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் விரேந்திர குமார் எடுத்துள்ள இந்த முடிவு, சமூக மரியாதையை மேலெழுப்பும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. "சமத்துவம் மற்றும் சுயமரியாதை" என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் மட்டும் அல்லாது பொதுமக்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், தனது தனிப்பட்ட இலட்சியத்தையும் சமூக நீதியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் அமைச்சர், ஒரு புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார்.
English Summary
No one should fall on their feet Union Minister Virendra Kumar controversial speech