உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகியோருக்கு 'கேல் ரத்னா விருது'
Khel Ratna Award announced for 4 people including World Chess Champion Gukesh
விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு மத்திய அரசின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெறுவதில் அவர்களுடன் ஆடவர் ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் உள்ளனர்.
குறித்த, விருதினை, எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
அர்ஜுனா விருதுகள் வழங்கப்படும் 32 விளையாட்டு வீரர்களின் பட்டியலையும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 17 பாரா-விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
'கேல் ரத்னா' விருது என்பது இந்தியாவின் உயரிய விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்கௌரவமாகும், கேல் ரத்னா விளையாட்டில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கிறது. மனு பாக்கரின் ஒலிம்பிக் வெற்றியும், சதுரங்கத்தில் டி குகேஷின் ஆதிக்கமும் அவர்களுக்கு இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான்
அத்துடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணியை வழி நடத்தும் ஹர்மன்பிரீத் சிங் அவர்களின் சமீபத்திய வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.களத்தில் அவரது தலைமைதத்துவம் முக்கியமானதாக பார்த்து பாராட்டப்பட்டது. அவருக்கும் இந்த விருது தகுதியானதே.
அதேபோல், பாராலிம்பிக்ஸில் பிரவீன் குமாரின் வெற்றி அவரது விதிவிலக்கான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தீய விதமும் அவரும் இந்த கேல் ரத்னா விருதுக்கு தகுதியான என்று நிரூபிக்கிறது.
பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு விளையாட்டுத் திறமைகளை அங்கீகரிப்பதில் விளையாட்டுத்துறை அமைச்சகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Khel Ratna Award announced for 4 people including World Chess Champion Gukesh