2024 ஆம் ஆண்டு ரூ.1,365 கோடி, பக்தர்கள் உண்டியல் காணிக்கை; திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


​2024-இல் திருப்பதி ஏழுமலையானை 02 கோடியே 55 லட்சம்  பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தலை முடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 99 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிலுக்கு பக்தர்கள் ரூ.1,365 கோடி, உண்டியல் காணிக்கை செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2024-இல் திருப்பதியில் லட்டு விற்பனை எண்ணிக்கை 12 கோடியே 14 லட்சம் என தேவஸ்தானம் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணக்கார கடவுள்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு ஒருவர். அந்தவகையில் கடந்த வருடத்தில் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் இதர கலப்படங்கள் செய்திருந்தமை கண்டுபிடிக்க பட்டு பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் பல்லாயிரம்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees to donate Rs1365 crore in 2024 Tirupati Devasthanams announces


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->