இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாசுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த வங்கதேசம்..! - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். 

இந்நிலையில், சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனு மீதான விசாரணை சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்நிலையில், இது தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சைபுல் இஸ்லாம் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய உள்ளதாக சின்மய் கிருஷ்ண தாசின் வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh again denies bail to Hindu religious leader Chinmoy Krishna Das


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->