அசைவ உணவுகளை கொடுத்தனுப்ப வேண்டாம் - சர்ச்சையை கிளப்பிய பள்ளியின் புதிய விதிமுறை.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செக்டார்-132 பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், குழந்தைகளுக்கு டிபன் பாக்சில் அசைவ உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அசைவ உணவுகளை அதிகாலையிலேயே சமைத்து டிபன் பாக்சில் வைத்து அனுப்புவதால், மதிய நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. 

இதை ஒரு கோரிக்கையாக மட்டுமே பெற்றோரிடம் முன்வைப்பதாகவும், சைவ உணவுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பலதரப்பட்ட மாணவர் சமுதாயத்திற்கு மரியாதை அளிப்பதாகவும் இருக்கக் கூடும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நொய்டா பள்ளி நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும்,  ஒரு தரப்பினரிடையே ஆதரவும் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நொய்டா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறையில் பெற்றோருக்கு ஆட்சேபம் இருந்தால் அவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

noida school new rule announce no pack non veg


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->