நொய்டா இரட்டை கோபுரம் தகா்ப்பு: கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி ஒப்பந்தம்!
Noida twin building wastage issue
நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமாா் 100 மீட்டா் உயரமுள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்த்தப்பட்டதில் உருவான சுமாா் 30 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமாா் 100 மீட்டா் உயரமுள்ள இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 28-ம் தேதி 3,700 கிலோவுக்கும் மேலான வெடிபொருள்களைப் பயன்படுத்தி தகா்க்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, கட்டிடம் தகர்க்கப்பட்டதால் உருவான சுமாா் 30 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஒப்பந்தம், ஆசியாவில் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முன்னணியில் உள்ள ‘ரீ சஸ்டெயினபிலிட்டி’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
"தினமும் 300 டன் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்கு கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த மறுசுழற்சிக்கு பின் அவை மீண்டும் கட்டுமானப் பொருள்களாக மாற்றப்படும்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Noida twin building wastage issue