கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தள் கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. 

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் இன்று மனு தாக்கல் செய்தார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரான சித்தாராமையா வருணா தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சி சார்பில் உப்பள்ளி தார்வார் தொகுதியிலும், மதசார்பற்ற ஜனதாக்கள் கட்சித் தலைவர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 935 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 873 பேர் ஆண்களும் 62 பேர் பெண்களும் உள்ளனர். நிலையில் கடைசி நாளான இன்று ஏராளமானோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக சார்பில் 164 மனுகளும், காங்கிரஸ் சார்பில் 147 மனுகளும், ஆம் ஆத்மி சார்பில் 91 மனுக்களும், ஜனதா தளம் சார்பில் 108 மனுக்களும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் 46 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சுயேச்சைகள் 359 பேர் தங்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் 2968 பேர் கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் கர்நாடக மாநில பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nominations filling for Karnataka Election has been completed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->