ஐஃபோன் வெறியால்.. டெலிவரி பாயை.. குத்திக்கொன்ற கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போனுக்கு செலுத்த பணம் இல்லாததால் டெலிவரி பாயை கொலை செய்த இளைஞரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச் சார்ந்தவர் ஹேமந்த் தத். 20 வயது இளைஞரான இவர் ஆன்லைன் மூலமாக செகண்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்றிற்கு ஆர்டர் செய்துள்ளார்.

சம்பவம் நடந்த தினத்தன்று  இவரது தாய் மற்றும் சகோதரி உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கின்றனர். அப்போது இவர் ஆர்டர் செய்த செல்போனை எடுத்துக் கொண்டு ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய்  இவரிடம் கொடுக்க வந்திருக்கிறார். தனக்கு வந்த பொருளைப் பெற்றுக் கொண்ட ஹேமந்தத் ஹேமந்த் பணம் எடுத்து வருகிறேன் அதுவரை  வீட்டிற்குள் இருங்கள் என டெலிவரி பாய் நாயக்கை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

இவரது பேச்சை நம்பி டெலிவரி பாயும் இவரது வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அப்போது பணம் எடுத்து வருவதாக உள்ளே சென்ற ஹேமந்த் வீட்டின் சமையலறையில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து டெலிவரி பாய்நாயக்கை சரா மாறியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது உடலை வீட்டில் இருக்கும்  குளியலறையில் மறைத்து வைத்திருக்கிறார். 

இரண்டு நாட்களாகிய துர்நாற்றம் வீச  ஆரம்பித்ததால் அந்த உடலை தனது மோட்டார் சைக்கிள் வைத்து எடுத்துச் சென்று வீட்டின் அருகில் உள்ள ஆளில்லாத இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து ஹேமந்தை கைது செய்து இருக்கின்றனர் கர்நாடக போலீசார்.

இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில் தன்னிடம் மொபைல் போன் வாங்க  தேவையான பணம் இல்லாததால் டெலிவரி பாய் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் ஹேமந்த். மேலும் தனக்கு ஐபோன் மிகவும் பிடிக்கும் என்பதால் அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசையில் டெலிவரி பாய் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

கொலை செய்த இளைஞரும் இதற்கு முன் ஒரு நிறுவனத்தில் டெலிவரிபாயாக வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தில் டெலிவரிக்கு வரும் பொருட்களை திருடியதால் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

not enough money to buy iphone karnataka youth killed the delivery boy and steal phone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->