பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்க்கு திடீர் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து விசாரணை நடத்த எஸ்.ஐ.டி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இதனை தொடர்ந்து பிரஜ்வல் மற்றும் அவரது தந்தையாகிய ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 

இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாய்க்கும் விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. 

பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து அவரது தாய் பவானிக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Obscene video issue notice to Prajwal mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->