ஒடிசா ரெயில் விபத்தின் சோகத்தில் மேலும் ஒரு சோகம்! அந்த 29 பேர் யார்?! - Seithipunal
Seithipunal


ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதால் அவை அனைத்தும், புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

பாலசோா் மாவட்டத்தில் பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கம் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என ஜூன் 2-ஆம் தேதி இரவு 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து நாட்டையே உலுக்கியது. கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 287 போ் உயிரிழந்தனா். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 6 போ் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிழந்துகொண்டே இருந்தார்.

பலரது சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதால் 81 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தன. அந்த சடலங்கள் அனைத்தும் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதை அடுத்து ஒரே சடலத்துக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், ரயில்வேயும், புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையும் சடலங்களை மரபணு சோதனை மூலம் அடையாளம் காண முடிவு செய்தன.

முதல்கட்டமாக 103 சடலங்களுக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட மரபணு மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் முடிவுகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு மாநில அரசு, உரிமை கோராமல் இருக்கும் சடலங்களை தகனம் செய்வது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha train accident unidentified bodies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->