மேட்ரிமோனி மூலம் வரன் தேடுகிறீர்களா.?! உஷார்..! 14 பெண்களிடம் லீலை செய்த கல்யாண மன்னன்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் ரமேஷ் சந்திர ஸ்வைன்  என்பவர் கடந்த 1982-ல் முதன் முதலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2002 ஆம் ஆண்டு அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த இரண்டு திருமணங்களின் மூலம் அவரது ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளனர். 

அதன்பின்னர் மேட்ரிமோனி மூலம் அவர் விவாகரத்தான பெண்களை குறி வைத்து அவர்களுடன் பழகி தனது இரு மனைவிகளுக்கும் தெரியாமல் அவர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பெற்று கம்பி நீட்டி உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மட்டும் அல்லாமல் தனது லீலைகளை அவர் டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புரிந்து வந்துள்ளார். அந்த வகையில் இதுவரை 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். தான் பழகும் பெண்களிடம் டாக்டர், வழக்கறிஞர், ரயில்வே அதிகாரி என்று பல்வேறு பொய்களை கூறி அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். 

இந்த விஷயங்கள் அனைத்தையும் அவரது கடைசி மனைவி எப்படியோ தெரிந்துகொண்டு இவரது லீலைகள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து நான்கு ஆதார் கார்டுகள் மற்றும் 11 ஏடிஎம் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odissa men cheated 14 women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->