இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மரணம்.. !
Omegran infection death in India
ஓமைக்கிரான் பாதித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாற்றம் அடைந்து பெரும் தொற்றாக மாறியது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்னும் டெல்டா வைரஸின் தாக்கமே கட்டுக்குள் வராத நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளிலேயே பரவ தொடங்கியுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 நெருங்கியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 52 வயது நபரொருவர் நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவருக்கு ஒரு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவருக்கு சர்க்கரை வியாதி போன்ற வேறு உடல் உபாதைகளும் இருந்ததால் இதனை நேரடியாக மரணம் என குறிப்பிடவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 450 பேருக்கு உண்மைதான் நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Omegran infection death in India