இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. 500-ஐ நெருங்கிய தொற்று.!!
omicron increasing in india
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, சண்டிகர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா-108, டெல்லி-79, குஜராத்-43, தெலுங்கானா-38, கேரளா-37, தமிழ்நாடு-34, கர்நாடகா-31, ராஜஸ்தான்-22, ஹரியானா-4, ஒடிசா-4, ஆந்திர பிரதேஷ்-4, ஜம்மு மற்றும் கஷ்மிர்-3, மேற்கு வங்காளம்-3, உத்தர பிரதேஷ்-2, சண்டிகர்-1, உத்தரகாண்ட்-1, லடாக் 1 என மொத்தம் 415 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு 115 பேர் குணமடைந்துள்ளனர்.
English Summary
omicron increasing in india