சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் கிறிஸ் கெய்ல்..? - Seithipunal
Seithipunal


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் முதல் சீசன் இந்தியாவில், எதிர்வரும் பிப்ரவரி 22 - மார்ச் 16 வரை நடக்க உள்ளது. இந்த லீக் தொடரில் மேற்கிந்திய அணியின் கெய்ல் பங்கேற்கவுள்ளார்.

 இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய அணி (West Indies team), இலங்கை என 06 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை, ராஜ்கோட் மற்றும் ராய்ப்பூரில் நடக்கவுள்ளன.

இந்த தொடரில் மேற்கிந்திய அணி சார்பில் கிறிஸ் கெய்ல் களமிறங்க உள்ளார். இதேபோல தென் ஆப்ரிக்காவின் நிடினி, இங்கிலாந்தின் மான்டி பனேசரும் விளையாட உள்ளனர். சமீபத்தில், சச்சின் தலைமையிலான இந்திய அணிக்காக 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து கெய்ல் கூறுகையில், ''சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க இருப்பது மகிழ்ச்சி. இத்தொடரில் 'யுனிவர்சன் பாஸின்' முழுத்திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து, நிடினி கூறுகையில், ''இத்தொடரின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. தவிர என்றும் மறக்க முடியாத தொடராக அமையும் என உறுதியளிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chris Gayle to participate in the International Masters League series


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->