ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்! விளையாட்டு வீராங்கனைக்கு ஏற்பட்ட விபரீதம்!
Onam celebration former handball player dies
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20ஆம் தேதி கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் விளையாட்டு வீராங்கனை கீழே விழுந்து உயிரிழந்தார்.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மேரிக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜிப்ஸி ஜோசப் (வயது 52) மலப்புரம் மாவட்ட மேலாளர் துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர் முன்னாள் தேசிய கால்பந்து வீராங்கனை ஆவார்.
இந்நிலையில் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் இவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு கொண்டார்.
அப்போது அங்கு ஓணம் பண்டிகை முன்னிட்டு இசை நாற்காலி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஜிப்ஸி திடீரென மயங்கி விழுந்து சுய நினைவின்றி காணப்பட்டார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜிப்ஸியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஓணம் கொண்டாட்டத்தின் போது முன்னாள் விளையாட்டு வீராங்கனை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Onam celebration former handball player dies