இன்று ஒரு நாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம்.! ஏன் தெரியுமா.?
One day entry to Taj Mahal is free today
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் புதுடெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் காதலின் நினைவுச்சின்னமாக போற்றப்படும் தாஜ் மஹால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜகானால், இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலுக்கு இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் தனி இடம் உண்டு. மேலும் இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுளாதளமான தாஜ்மஹாலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றன.
இந்நிலையில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
One day entry to Taj Mahal is free today