நச்சு வாயு கசிவு - ஒருவர் பலி: 9 பேர் சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டம் பரவடா பகுதியில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து, திடீரென நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் மயக்கமடைந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும், 9 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். இதேபோல், அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் மற்றும் ஆந்திர பிரதேச முன்னாள் அமைச்சர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குடிவடா அமர்நாத் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one man died and nine people injured for poisones gas attack in andira


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->