இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் - புதிதாக பணியில் சேர்ந்தால் ஒரு மாதம் அரசு ஊதியம்.! - Seithipunal
Seithipunal


நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் 5 புதிய திட்டங்களை அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "அரசாங்கத்தின் 9 முதன்மை முன்னுரிமைகளில் ஒன்று 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்'.

அதன்படி 5 ஆண்டு காலத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த திட்டங்கள் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரையும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதில் ஒன்று, முதல்முறை தொழிலாளர்களுக்கான புதிய திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும். 

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்கும். இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள். 

*'உற்பத்தித் துறையில் வேலை உருவாக்கம்' திட்டத்தின் கீழ், முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை அரசாங்கம் ஊக்குவிக்கும். வேலைவாய்ப்பின் முதல் 4 ஆண்டுகளில் அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிபங்களிப்பு தொடர்பாக ஊழியர் மற்றும் முதலாளி இருவருக்கும் நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள். '

* முதலாளிகளுக்கு ஆதரவு' என்பது ஒரு முதலாளியை மையமாகக் கொண்ட திட்டமாகும், இது அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் உள்ள அனைத்து கூடுதல் வேலைவாய்ப்புகளும் இதில் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிபங்களிப்புக்காக அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வரை முதலாளிகளுக்கு திருப்பிச் செலுத்தும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*அரசாங்க ஊக்குவிப்பு நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களை எளிதாக்குவதற்கு 'மாதிரி திறன் கடன் திட்டம்' மாற்றியமைக்கப்படும். இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்களுக்கு உதவும்" என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one month govt salary to new job joining youths union minister nirmala seetharaman info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->