அடப்பாவிகளா.. கடைசியில் குடிமகனையும் ஏமாற்றிய மோசடி கும்பல்!  - Seithipunal
Seithipunal


குருகிராம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிரபல மதுபானக் கடைகளின் பெயர்கள் ஆன்லைனில் இடம் பெற்று விளம்பரம் செய்யப்பட்டது. 

இந்த விளம்பரத்தில் ஆன்லைனில் மது ஆர்டர் செய்பவர்களுக்கு மது பாட்டில்கள் அவர்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரத்தை நம்பி 200-க்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தினை இழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது,

"ராஜஸ்தானைச் சேர்ந்த அசாரூதின் கான் என்பவர் தனது சொந்த மாநிலத்தில் இருந்து இந்த ஆன்லைன் விளம்பரங்களை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் இந்த வியாபாரத்தைப் பெருக்க கூகுள் விளம்பரங்களை பயன்படுத்தியுள்ளார்.

தில்லியை சேர்ந்த ஒருவர், யூடியூப் விடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த விளம்பரம் வந்ததாகவும், அதனை நம்பி பணத்தை ஏமாந்து விட்டதாகவும் புகாரில் அளித்தார். இப்புகாரின் பேரில், அசாரூதின் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டவுடன் ஒரு க்யூஆர் கோடு வந்துள்ளது. அதனை ஸ்கேன் செய்ததும் ஒரு ஓடிபி வந்துள்ளது. அதனை பகிர்ந்தவுடன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78,374 எடுக்கப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online liquor scam delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->