ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்.. நாடாளுமன்றத்தில் இருந்து பேரணி.. பற்றி எரியும் அதானி விவகாரம்..!! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் தொடர்பான அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் செய்த முறைகேடு குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில் இரண்டாவது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இரண்டாவது அமர்விலும் எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் முறைகேடு தொடர்பாக குரல் எழுப்பி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுத் வரை எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்தப் பேரணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி, சிவசேனா, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி டெல்லி அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களையும் யோசனைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties rally today regarding Adani Group corruption


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->