கேரளா : வரியை திரும்ப பெற மறுப்பு தெரிவித்த அரசு.! சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சிகள்.!
opposition party walkout in assembly for govt refused refund tax
சமீபத்தில் கேரள மாநிலத்தின் சட்டசபையில் நடப்பாபட்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் படி, இன்றும் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்கு வெளியிலும் உள்ளேயும் போராட்டம் நடத்தினர்.
இருப்பினும், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் உள்ளிட்டவை மீதான வரியை திரும்ப பெற முடியாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பதிலளித்த நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், "பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வரி உயர்வில் எந்த மாற்றமும் இல்லை. மாநிலத்தில் 62 லட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படுவது தவிர்க்க முடியாதது
இந்த வரிப்பணம் சிறப்பு நிதிக்கு செல்லும். இது மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தேவையான மொத்த தொகையில் பத்து சதவீதம் குறைவு. இதேபோல் மதுபான விற்பனை மீதான செஸ் வரி கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
இந்த வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் இருந்தால் மாநிலம் முன்னேற முடியாது. அதனால், மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
opposition party walkout in assembly for govt refused refund tax