கொட்டித் தீர்க்க போகும் மழை - 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- "கேரளாவில், பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அந்த மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூர் மற்றும் பாலக்காடு தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் கடல்நீர் ஊடுருவல் குறித்து கடலோர குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். 

கனமழை பெய்யும் போது மக்கள் இரவு நேரங்களில் ஹைரேஞ்ச் வழியாக பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாழடைந்த வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange alert to three districts in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->