அசாம் வெள்ளம் : 19 மாவட்டங்கள்.. 6 லட்சம் மக்கள் பாதிப்பு... மீட்பு பணிகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி நீர் கரை புரண்டு ஓடுகிறது. குறிப்பாக பிரம்மபுத்திரா ஆறிலும் அதன் 8 கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரையை தாண்டி ஓடுவதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. 

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வாஸ் தெரிவிக்கையில், பிரம்மபுத்திரா மற்றும் பராக் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். 

ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாநில அமைச்சரவையும் இங்கு சூழலை கவனித்து கொண்டுள்ளது. முன்னதாக அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையே இங்கு அசாமில் வெள்ளம் ஏற்பட காரணம்" என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து அசாம் மக்கள் தெரிவிக்கையில், "இது ஆண்டு தோறும் தொடர்கதையாக நடந்து வரும் நிகழ்வு தான். எங்கள் பகுதியில் கிராமங்கள் தான் அதிகம் உள்ளன. எங்கள் வீடுகள், சாலைகள் அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளன நேற்று இரவு முதலே ஆற்றில் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. நாங்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்கிறோம்" என்று தெரிவித்தபடியே வெள்ளநீரில் படகில் தங்கள் உடமைகளுடன் மக்கள் வேறு இடம் நோக்கிச் செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 6 Lakh Peoples Suffered in Assam Flood


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->