பஞ்சாப்: ஏகே ரைபிள், தோட்டாக்களை சுமந்து வந்த பாகிஸ்தான் ட்ரோன்.! சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப் - Seithipunal
Seithipunal


பஞ்சாப் எல்லையில் ஏகே துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சுமந்து வந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்லா கிராமத்திற்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சுமந்து ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியுள்ளது. இதைப்பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது நபி நகர் கிராமத்திற்கு அருகிலுள்ள விவசாய வயலில் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஒரு ஏகே துப்பாக்கி, இரண்டு தோட்டா குப்பைகள் மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Drone Carrying AK Rifle Bullets Shot Down Along Punjab Border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->