இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையானது வரையறை இல்லாமல் உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. 

இத்தகைய நிலையில் மருந்து பொருட்களுக்கு பாகிஸ்தானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி கொடுத்துள்ளது. 

இது பற்றி பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " உயிர் காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி கொள்கை ஆணை 2022-இன் கீழ் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. எனவே, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய தடை எதுவும் கிடையாது. 

எனவே இந்தியாவிலிருந்து அவற்றைத் பெற இறக்குமதி செய்வதற்கு தடை இல்லா சான்று பெற தேவைப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan import medicine from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->