காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்! துப்பாக்கி சூட்டில் பி.எஸ்.எப். வீரர் காயம்!
Pakistan violates the ceasefire agreement in Kashmir BSF in firing The player is injured
ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி,
வரும் 18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தலும், தொடர்ந்து வரும் 25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை அக்னூர் பகுதியில் முன்னறிவிப்பின்றி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த துப்பாக்கி சூடுக்கு உடனடியாக பி.எஸ்.எப். வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இருந்த போதிலும், பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளதாகவும், தொடர்ந்து, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக பி.எஸ்.எப்.பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ராம்கார் பிரிவு பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் பலியானார். இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வரும் 18-ம் தேதி முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல் நடந்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.
English Summary
Pakistan violates the ceasefire agreement in Kashmir BSF in firing The player is injured