பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் ட்ரோன் வீசிய ஹெராயின் பாக்கெட் மீட்பு.!!
pakisthan drugs pocket rescue in punjap amirtasaras
பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் ட்ரோன் வீசிய ஹெராயின் பாக்கெட் மீட்பு.!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டம் ராய் கிராமத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன் சத்தம் கேட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும் விதமாக மிகப் பெரிய அளவிலான ஹெராயின் பாக்கெட் கிடந்துள்ளது. உடனே எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்த பாக்கெட்டை மீட்டனர். இதுதொடர்பாக பஞ்சாப் எல்லைப் பாதுகாப்பு படை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், "மஞ்சள் நிற பசை நாடாவில் சுற்றப்பட்டு, ஒரு பச்சை நிற நைலான் கயிறு மற்றும் பாக்கெட்டுடன் இணைக்கப்பட்ட கொக்கி உள்ளிட்டவை விவசாய வயலில் இருந்து மீட்கப்பட்டது.
அந்த பாக்கெட்டைத் திறந்து பார்த்தபோது, அதில், 5.260 கிலோ எடையுள்ள 5 ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த புதன் கிழமை அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படை மீட்டது.
அதன் பின்னர் அமிர்தசரஸ் மாவட்டத்தின் பைனி ராஜ்புதானா கிராமத்திற்கு அருகே ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்து தாக்கினர். இதைத்தொடர்ந்து இன்று பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஹெராயின் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
pakisthan drugs pocket rescue in punjap amirtasaras