ஒரு லட்சம் பானி பூரியால் மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பானி பூரி வியாபாரி..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் போபால் மாவட்டத்தில், தன் மகளுக்கு  முதல் வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு, ஒரு லட்சம் பானி பூரிகளை இலவசமாக வினியோகித்த பானி பூரி வியாபாரி.

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் வசிப்பவர் ஆன்சல் குப்தா. பானி பூரி வியாபாரியான இவரது மகள் அனோகிக்கு சமீபத்தில் முதல் வயது பூர்த்தி அடைந்தது.இதை மிக பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்த ஆன்சல் குப்தா, போபாலில் உள்ள மைதானத்தில் இருபத்து ஒன்று ஸ்டால்கள் அமைத்து, ஒரு லட்சத்து ஆயிரம் பானி பூரிகளை இலவசமாக வழங்கினார்.

அப்போது, 'பெண் குழந்தைகளை வளருங்கள்; பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பியுங்கள்' என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய 'நோட்டீஸை ' வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் எம்.எல்.ஏ., ராமேஷ்வர் ஷர்மா பங்கேற்றுள்ளார். இவ்விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்த பானி பூரிகளை சாப்பிட்டு விட்டு, ஆன்சல் குப்தாவின் குழந்தைக்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்து சென்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், சமூக வலைதளத்தில் ஆன்சல் குப்தாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pani puri merchant celebrated his daughter's birthday with 1 lakh pani puri..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->