பரபரப்பில் பஞ்சாப்..ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய புள்ளி துப்பாக்கியால் சுட்டு கொலை!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம்  அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள இலகுவாள் கிராமத்தை சேர்ந்தவர் தீபிந்தர் சிங். இவர் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தால் இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு தனது வீட்டில் வாசலில் அமர்ந்து  நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் தீபிந்தர் சிங் மற்றும் அவரது நண்பர்களை துப்பாக்கியில் சரமாரியாக  சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திலே தீபிந்தர் சிங் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாபில் நேற்று மக்களவைத் தேர்தலில் நடந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள்ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panjab in excitement Aam Aadmi Party main point shot dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->