பதவியை ராஜினாமா செய்யும் பன்வாரிலால் புரோகித் - காரணம் என்ன?
panvarilal prohit resighn punjab governor posting
பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பிற குறிப்பிட்ட விசயங்களை முன்னிட்டு, கவர்னர் மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேச நிர்வாக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.
இருப்பினும், அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. பன்வாரிலால் புரோகித கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பஞ்சாப் ஆளுநராக பதவியேற்றார். அதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அவர் ஆளுநராக இருந்தபோது, ஆம் ஆத்மி அரசுடன் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது. பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புரோகித்துக்கு பா.ஜ.க.வில் செல்வாக்கு உள்ளது என்று ஆம் ஆத்மி அடிக்கடி குற்றச்சாட்டு முன் வைத்தததுடன், அவர்களுடைய அரசுக்கு எதிராக புரோகித் சதி திட்டம் தீட்டுகிறார் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில், புரோக்கித்தின் பதவி விலகலை ஜனாதிபதி முர்மு ஏற்று கொண்டார்.
English Summary
panvarilal prohit resighn punjab governor posting