படகு வசதி கூட இல்லை! 17 கி.மீ தோளில் சுமந்து சென்று மகளின் உயிரை காப்பாற்றிய பெற்றோர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம்: பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள கொரமடாவை சேர்ந்தவர் பழங்குடியின சிறுமி மாரியம்மா (வயது 7). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. 

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் தெலுங்கானா மாநில எல்லைக்கும், ஒடிசா மாநில எல்லைக்கும் இடையே உள்ள நாகவலி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். 

மேலும் ஆற்றை கடந்து செல்ல படகு வசதி கூட இல்லை. தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

அதனை தாண்டி சிறுமியின் பெற்றோர்கள், மகளை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். 

ஆனால் ஆற்றைக் கடக்க படகு இல்லை எனினும், தனது மகளின் உயிரை காப்பாற்ற முடிவு செய்து அவரது பெற்றோர் மூங்கிலை வெட்டி எடுத்து வந்து படகு ஒன்றை செய்து, அதில் தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு கடும் வெள்ளத்திலும் போராடி அக்கரையை அடைந்தனர். 

இதன் பின்னர் மகளை தோளில் சுமந்து கொண்டு 17 கிலோ மீட்டர் தூரம் சென்று ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents daughter saved 17 km carried shoulder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->