அது முதலமைச்சர் கையில் தான் உள்ளது., முக்கிய விவகாரத்தில் கைகட்டி மத்திய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இன்று, தலைநகர் டெல்லியின் மாசுபாடு தொடர்பாக பாஜக எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் கேள்வி ஒன்றை எழுப்பினார். 

இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்து பேசுகையில், "டெல்லியின் மாசுபாட்டை குறைக்கும் பொறுப்பு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு தான் உள்ளது.

உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, தேசிய தலைநகர பிராந்தியம் (என்சிஆர்) பகுதியில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் நீண்ட கால தீர்வுகளுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து காற்று தர மேலாண்மை ஆணையம் ஆலோசனைகளை வழங்கும்படி அழைப்பு விடுத்தது. 

அதன்படி, கிடைத்த பரிந்துரைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு,  காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது" என்று அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்தார்.

மேலும் அவரது பதில் உரையில். டெல்லியின் மாசுபாட்டை குறைக்க வேண்டிய பொறுப்பு டெல்லி அரசுக்கு உள்ளது என்றும், மாசு பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆம் ஆத்மி அரசாங்கம் மெத்தன போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Delhi Pollution


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->