மத்திய பாஜக ஆட்சியை கலைக்க காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு! ஐ.என்.டி.ஐ.ஏ நிலைப்பாடு என்ன?! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீது, மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வர உள்ளது.

காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும், அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, பிரதமரை பேச வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்தான் முடியும் என்றாலும், காங்கிரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியாக ஐ.என்.டி.ஐ.ஏ என்ன முடிவு எடுக்கும் என்பது கவனிக்க தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேலும், மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Monsoon Session No Confidence Motion Manipur Voilence PM Modi 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->