மக்களவையில் இருந்து "செங்கோலை" அகற்ற வேண்டும் - பரபரப்பை உண்டாக்கிய எம்பி! உடனே கிடைத்த முடிவு! - Seithipunal
Seithipunal


"மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்" என்று, மக்களவை சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.

முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும்  செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி  ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வைத்துள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி எம் பி சவுத்ரி வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. 

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ள நிலையில் அவரது உரையை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.,க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Samajvadhi MP Request Sengol Constitution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->