இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி! குறைகிறது தங்கம், வெள்ளி விலை - மத்திய அரசு பட்ஜெட் 2024! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவரின் அந்த பட்ஜெட் தாக்கல் உரையில், "மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. 

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.  9 முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், சில முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள்:

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி கட்டணம் ரத்து செய்யப்படும்.

எக்ஸ்ரே உபகரணங்களுக்கு சுங்கவரி ரத்து செய்யப்படும்.

பீகாரில் வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடியும், ,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்.

பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் கொண்டுவரப்படும்.

விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.

உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.111 லட்சம் கோடி மூலநிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 10 லட்சம் கோடியில் நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களின் வீடு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.

ஊரக வளர்ச்சிக்கு ரூ. 2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Union Budget 2024 gold silver tax reduce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->