செல்போன் விலை குறைகிறது - மத்திய அரசு பட்ஜெட் 2024!
Parliament Union Budget 2024 MOBILE TAX
இன்று நாடாளுமன்றத்தில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில், செல்போன் மற்றும் செல்போனுக்கான சார்ஜர்களுக்கு சுங்கவரி 15 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
* புற்றுநோய்க்கு வழங்கப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி கட்டணம் ரத்து,
* எக்ஸ்ரே உபகரணங்களுக்கு சுங்கவரி ரத்து,
* காசி விஸ்வநாதர் கோயில் மேம்படுத்தப்படும்,
* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள்,
* விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு,
* பழங்குடியின மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு,
* தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.
* உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.111 லட்சம் கோடி மூலநிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூ. 10 லட்சம் கோடியில் நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களின் வீடு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
* முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ரூ. 20 லட்சமாக உயர்வு - நிர்மலா சீதாராமன்
* ஊரக வளர்ச்சிக்கு ரூ. 2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
English Summary
Parliament Union Budget 2024 MOBILE TAX