1 கோடி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000: அதிரடி அறிவிப்பு - மத்திய அரசு பட்ஜெட் 2024! - Seithipunal
Seithipunal


நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த பட்ஜெட் தாக்கல் உரையில், "மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. 

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.  9 முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று உரையாற்றினார்.

பட்ஜெட் அறிவிப்புகள்:

தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.

உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.111 லட்சம் கோடி மூலநிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பீகாரில்  வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 10 லட்சம் கோடியில் நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களின் வீடு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக மத்திய அரசு மேம்படுத்தும்.

மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Union Budget 2024 Nirmala Sitharaman announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->