இது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்! - Seithipunal
Seithipunal


நடப்பு 2024 - 2025 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை, இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக ஆட்சியில் அமர்த்தி உள்ளதாகவும், உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும், 2024 - 25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக நிதிப்பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 4,54,773 கோடி ரூபாய், வளர்ச்சித் துறைக்கு 2,65,808 கோடி ரூபாய், வேளாண்மைத் துறைக்கு 1,51,851 கோடி ரூபாய், உள் துறைக்கு 1,50,983 கோடி ரூபாய், கல்வித் துறைக்கு - 1,25,638 கோடி ரூபாய், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 1,16,342 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறைக்கு 89,287 கோடி ரூபாய், ஆற்றல் துறைக்கு 68,769 கோடி ரூபாய், சமூக நலத் துறைக்கு 56,501 கோடி ரூபாய்,  வணிகம் & தொழில்த்துறைக்கு 47,559 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் உரையில், இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட். நாட்டில் வறுமையை ஒழிப்புதற்கான பாதையை மத்திய பட்ஜெட் உருவாக்கியுள்ளது.

உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதி துறை ஆகியவை ஒவ்வொரு ஜில்லாவும் பலம் அடையும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. ஏஞ்சல் டாக்ஸ் முறை அகற்றப்பட்டது போன்ற பல தடைகள் இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டார்ட் அப் களுக்கு புதிய உத்வேகம் வழங்கும் விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளது என்று - 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Union Budget 2024 PM Modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->