ரூ.3958 கோடி போதைப் பொருள்! தேர்தல் நேரத்தில் அதிரடி - முதலிடம் பிடித்த மாநிலம்!
Parliamentary Elections Election Commission Narcotics Gujarat
தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் போதை பொருட்களின் மதிப்பு ரூ.8,889 கோடியை தொட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 75 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் போதை பொருட்களின் மதிப்பு ரூ.8,889 கோடி. இதில், ரூ.3958 கோடி மதிப்புள்ள 45% போதைப் பொருட்கள் ஆகும்.
மேலும், 849.15 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. ரூ.814 கோடி மதிப்புடைய 5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.
தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் ரூ.1260.33 கோடிக்கு கைப்பற்றப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்க இருந்த இலவச பொருட்கள் ரூ.2006.56 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டிலேயே அதிகபட்சமாகக் குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.1187.80 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.1133.82 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.734.54 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Parliamentary Elections Election Commission Narcotics Gujarat