தயாராகும் நாடாளுமன்றம் - புதிய மக்களவை உறுப்பினர்களை வரவேற்கும் பணி தீவிரம்.!
parliment ready for welcome to new parliment members
மக்களவைக்கான தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்கு என்னும் பணி வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதிய மக்களவை உறுப்பினர்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகம் மும்முரமாக தயாராகி வருகிறது.
இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-"18-வது மக்களவை உறுப்பினர்களை வரவேற்க தயாராக உள்ளோம். அவர்களின் தடையற்ற பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களவையின் ஹவுஸ் கமிட்டியால் வழக்கமான தங்குமிடம் வழங்கப்படும் வரை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேற்கு கோர்ட்டு விடுதி அல்லது அரசு விருந்தினர் இல்லங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அவர்களின் பயண திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதிகள் செய்துதரப்படும்.
புதிய உறுப்பினர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை கவனமாக கண்காணிக்கவும், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தொடர்பு விவரங்களை நிகழ்நேர அடிப்படையில் பதிவு செய்யவும் ஒரு குழுவுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
parliment ready for welcome to new parliment members